பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்மன்னிப்பு கோர வேண்டும்! – சரத் வீரசேகர

sarath

” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சாதாரண சம்பவம் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அது உண்மையெனில் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் அவர் இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். தான் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும்.”- என்றார் சரத் வீரசேகர.

“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

Exit mobile version