WhatsApp Image 2021 12 08 at 6.51.01 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் வேறு இலங்கை வேறு – மழுப்பும் விமல்!!

Share

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிற்சில அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட சில சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதாவது புலிகள் அங்கு இராணுவத்தைக் கொல்லும்போது, அதனால் கொதிப்படைந்த மக்கள் குழப்பமடைந்திருக்கலாம்.

அதேபோல யாழ். நூலகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரசியல் பிளவுகளால் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்றன.

ஆனால் பாகிஸ்தானில் நடந்த சம்பவம் அவ்வாறு அல்ல. சுவரில் இருந்த போஸ்டரை அகற்றியதால் அந்நபரை கொடூரமாகக் கொன்றுள்ளனர். இலங்கையில் நடந்தவை சரியென நான் கூற விளையவில்லை. ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு சமப்படுத்த முற்பட வேண்டாம்.

நீங்கள் கண்டியில் படித்த எம்.பி, கண்டி மக்கள் உங்களுடன் எப்படி பழகினார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே, நியாயமாக உரையாற்றுங்கள். – என்றார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...