“அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, இணைந்து பயணிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் மக்களுக்கான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளான எமக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அழைப்பைக்கூட கேட்டுபெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.” – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன்.
‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
“நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இப்படியான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என்பதை இணைய ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதன்பின்னர் அது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபருக்கு அறிவித்துதான், அதற்கான அழைப்பை பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய சந்திப்புகூட ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் எனக்கும் , உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றது. இது தவறான அணுகுமுறையாகும். ” – எனவும் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment