25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

Share

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​பாதாள உலகக் குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோரின் தலைமையில், இலங்கையில் இருந்து சென்ற குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்தேக நபர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து விசாரித்ததில், நாட்டில் செயற்பட்டு வந்த பாரிய போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் கொலை குற்றங்கள் தொடர்பான பல முக்கியமான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும், அண்மையில் பத்மே வழங்கிய தகவலின் அடிப்படையில், தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான இஷாரா செவ்வந்தியும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...