நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ் நகரில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக யாழ் நகரில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக இன்று காலை முதல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குடும்ப பங்கிட்டு அட்டையுடன் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது அப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், குறித்த பகுதியில் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment