கனடாவில் சுமந்திரனுக்கு எதிர்ப்பு: கனடா கிளையின் கருத்தைக் கோரும் மாவை!

mavai

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பட்ட போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் யாரால், ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version