இணையவழி விருந்து: போதைப்பொருட்களுடன் 12 நபர்கள் கைது!

12 7

சுற்றுலா விடுதியொன்றில் இருந்து போதைப்பொருட்களுடன் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று (21) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றுலா விடுதியில் இணையத்தின் ஊடாக விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பொலிஸாரால் சந்தேக நபர்களிடமிருந்து 01 கிராம் 625 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்று கிராம் 600 கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிராம் 25 கிராம் க்ரூஸ் போதைப்பொருளும், ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹேஸ் ரக போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமஹாராம மற்றும் கோனபினுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

 

Exit mobile version