ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்தார்.
கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment