‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் உள்வாங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” – என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தமிழர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி, குறித்த செயலணியில்மூன்று தமிழர்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment