‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் எழுப்பினார்.
இதற்கு நாடாளுமன்றில் பதில் வழங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களின் அடிப்படையில் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். ஆனால் இந்தப் பதிலில் திருப்தி இல்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இச்செயலணி தொடர்பில் ஏற்கனவே பல எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற சூழ்நிலையில், நாட்டில் மக்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாகப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பினார்.
அதே போன்று இந்தச் செயலணி உருவாக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமது கேள்விக்கு சரியான பதிலை வழங்க முடியாமல், பிரதமரும், சபை முதல்வரும் தடுமாறுவதை அறிவதாகவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
#SrilankaNews