EBITIQDENMXY7X6WVX7I4IGPAM
செய்திகள்உலகம்

கனடாவில் பரவிவரும் ஒமைக்ரோன் வைரஸ்!!

Share

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை  கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல நாடுகளில் குறித்த  வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது.

பல நாடுகளும் இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லைகளை மூடி வருகின்றன. பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களிடம் ஒமிக்ரோன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி ஆகியவையும் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளவா்களுக்கு அந்த வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இதுவரை ஒமைக்ரோன் வகை கொரோனா கனடா நாட்டில்  2 பேருக்கு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில், ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...