கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், குஜராத், மஹாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியாகி உள்ளதுடன், ஒமைக்ற்ன் தொற்றுக்கான பரிசோதனை மெற்கொடு வருவதாகவும் தெரிய வருகிறது.
Leave a comment