harshana rajakaruna
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் வழங்குங்கள்! – ஹர்ஷன ராஜகருணா

Share

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நடவடிக்கையை சர்வதேச விசாரணை ஆணைகுழுவுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுவிவாதத்தின் போதே முன்வைத்தார்.

இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவர்களால் ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு பெற்று தருவதாக கடந்த தேர்தல் மேடைகளில் பாரிய அளவில் பேசப்பட்டன. ஆனால் இப்பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வுகள் எட்டப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் தண்டனைகள் பெறும் வரை நாம் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றிய இவர்,

பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையிடுவதால் விசாரணைகளை மேற்கொள்ள இயலாது செயலிழந்து நிற்பதை நாம் காணுகின்றோம்.

தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரின் வாக்குமூலம் பெறப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை சர்வதேசத்துக்கு வழங்குவதன் மூலமே கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களுக்கும் நாம்  நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...