DvCJCaNVsAIF LG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வான் பாயும் குளங்கள்!! – குளங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Share

நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் எனவும், பெற்றோர்கள், சிறுவர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராமங்களில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த பகுதிகளுக்கு சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு கிராம அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், விசேடமாக சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...