gover
செய்திகள்இலங்கை

நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது!

Share

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குடிதண்ணீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதேசத்திலும் மின் தடை ஏற்பட்டால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு மின்சாரம் வழங்குவதற்கு சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டால் அந்த நேரத்தில் விநியோகத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீர் விநியோகத்தை துண்டிக்கும் நிகழ்வு இடம்பெறும் என தாம் நினைக்கவில்லை எனவும், நீண்டகாலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மின்சார சபை இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...