யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது – என்றார்.
அதேவேளை நோயாளிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment