காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கறுப்புப் பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், குறித்த கொரோனா மரணம் செப்டம்பர் 26ஆம் திகதி பதிவானதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, நுரையீரலில் அசாதாரணம் காணப்பட்ட பின்னர் நுரையீரல் திசு மாதிரியை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் கறுப்புப் பூஞ்சைகள் இருப்பதாக கோடிட்டிக் காட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த மரணம் நிமோனியாவால் நிகழ்ந்ததென்றும் மரணத்திற்கு காரணம் கறுப்புப் பூஞ்சைத் தொற்று அல்ல எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment