பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர்கள் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் கடந்த மாதம் மர்ம நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.