நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் 2020 முதல், லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரவு நேரங்களில் நகரை முடக்குவது தொடர்பில் கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இரவு நேரங்களில், நிலத்தடி ரயில் சேவைகள் இயங்குவதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தற்போது, மேயர் சாதிக் கான் மற்றும் லண்டன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பண்டிகை காலத்தின் துவக்கத்தில், மேற்கு முனையத்தின் பொருளாதார மீட்புக்கு மிக முக்கியமான நேரம் இது. இதனை கருத்தில் கொண்டு நைட் டியூப் ரயில் சேவைகளை முழுவதுமாக மீண்டும் திறக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்று நிக்கி ஐகென் மேயருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அளிக்கப்பட மனுவில்,
“லண்டனில் பெண்களின் பாதுகாப்பு, குறிப்பாக இரவு நேரங்களில் கேள்விக்குறியாகியுள்ளது. லண்டன் தெருக்களில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சபீனா நெஸ்ஸா மற்றும் சாரா எவரார்ட் ஆகியோரின் கொலைகள் பெண்கள் இரவு நேரத்தில் உலாவ அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளுக்கு அமைய, இங்கிலாந்தில் 70% க்கும் மேற்பட்ட பெண்கள் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையொப்பங்களைக் குவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லண்டன் அண்டர்கிரவுண்ட் நிர்வாக இயக்குநர் ஆண்டி லார்ட், “லண்டனின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்வது ஒரு முழுமையான முன்னுரிமை” – என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தித் தொடர்பாளர் ஒருவரின் கருத்துப்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட் டியூப் லைன் சேவைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த மாதம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reference
Night Tube Service To Return This Weekend — But There’s A Twist
1 Comment