அதிரடியாக இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு!!

Jeevan thiyagarajah

வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பினை வட மாகாண புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா இரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தலைவர் சாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரி கந்தையா அரியநாயகமினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவின் அடிப்படையில் அவரை தலைவர் பதவியில் இருந்தும் உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்க முன்னாள் ஆளுனர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்காக செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் புதிய ஆளுனரின் அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த வர்த்மானி அறிவிப்பை இரத்து செய்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version