கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவர்கள் அனைவரும் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், மீண்டும் உடல் உறுப்புக்களில் தொற்று ஏற்பட்டதால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களாவார்.
குறிப்பாக மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பல்வேறு பிரச்சினைகள், இதயத் துடிப்பு அதிகரித்தல், நிமோனியா, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இவர்களிடம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொற்றிலிருந்து குணமடைந்து 6 மாதங்கள் வரை இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.