ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேகமாகப் பரவாது என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையில் ஒமிக்ரோன் பற்றிய இந்தத் தகவலைக் வெளியிட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வைரஸ்தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், பூஸ்டர் தடுப்பூசி மூலம் பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment