Rishad Badiyudeen
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது! – ரிஷாட்

Share

அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான 5ம் நாள்  விவாதத்தில்  இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் , வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானமொன்று எடுக்கப்படும். அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது.

கடந்த இரு வருடங்களில் 20 ஊடாக அவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தையே நான் சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

மஹிந்த ஆட்சிகாலப்பகுதியில் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் பங்காளிகளாக நாங்களும் செயற்பட்டோம்.

ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தது தவறான செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...