இரசாயன உரம் வேண்டும்: போர்க்கொடி உயர்த்திய மக்கள்

இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Mannar Protest 01

இதன்போது பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அத்தோடு, அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் கோசம் எழுப்பியதோடு, அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜரும் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version