Untitled 1 1
இந்தியாசெய்திகள்

டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க்

Share

டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க்

கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவுக்குள் நுழையும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கும் இடையில் இன்றையதினம்(21.06.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய எலான் மஸ்க், ”நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

கூடிய விரைவில் இதற்காக நாங்கள் அறிவிப்போம் என நம்புகிறேன். நான் அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன். பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது” என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பல முறை அமெரிக்கா சென்று இருந்தாலும், தற்போதைய பயணம் என்பதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதிலும் முக்கியமாக இந்தியா – ரஷ்யா மத்தியிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படும் வேளையில் ரஷ்யா – பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் முதல் பல்வேறு உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்தில் பல முக்கியமான முதலீடுகள் குறித்த அறிவிப்பு, ஆயுத ஒப்பந்தங்கள், சர்வதேச பாதுகாப்பு என பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போதே எலான் மஸ்க் முதலீடுகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...