world 18
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றி: இலங்கை எம்.பி. நாமல் ராஜபக்ஷ சமூக வலைதளத்தில் வாழ்த்து

Share

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிமுகமான முதல் தேர்தலிலேயே சுமார் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய்க்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அண்டை நாடான இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விஜய்யின் இந்தச் சாதனையை மனதாரப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து நாமல் ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலில் வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்குவதற்கான வலிமையையும் உறுதியையும் விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் விரும்புவதாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கிடையிலான உறவு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பொதுவான விடயங்களில் இலங்கையுடன் மேலும் வலுவான மற்றும் நேர்மறையான உறவை விஜய்யின் தலைமை உருவாக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி பெரும்பான்மைக்கு நெருக்கமாக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் ஈழத் தமிழர்களின் விவகாரங்கள் மற்றும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலங்கை அரசியல்வாதிகள் உன்னிப்பாகக் கவனித்து வரும் சூழலில், நாமல் ராஜபக்ஷவின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...