யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார்.
1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.
1964 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குமாரதாஸ மாப்பாண முதலியார் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு, இந்து சயமப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாப்பாண முதலியாரின் இழப்பு பாரிய இழப்பு எனவும், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தனதும், மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.