நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.
இன்றைய தினம் தொடக்கம், குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி தனது 92 வது வயலில் இறைபதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஞாபகார்த்தமாக 92 பனைமர விதைகள் இன்று வீதியோரங்களில் நாட்டப்பட்டது.
நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல் அமைப்பினால் செம்மணிவீதியும் நல்லூரன் செம்மணி வளைவும் சந்திக்கும் வீதியோரங்களில் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலகர் அ.எழிலரசி ஆகியோர் கலந்துகொண்டனர்
அத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் , கலைக்கூடல் அங்கத்தவர்கள், குகனேயர் குழாம் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
#SrilankaNews