தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் மர்ம படகொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகுக்கு அருகில் இருந்து சுழியோடிகள் பாவிக்கும் காலணி , படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள் , 18கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் , மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் , கடலோர பாதுகாப்பு பிரிவினர் , க்யூ பிரிவினர் என பல்வேறு பட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#India
Leave a comment