முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தண்ணீர்ஊற்றுசந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சுமார் 15 இற்கும் மேற்பட்ட வீதிதடைகளில் வீதியால் பயணிப்பவர்கள் தீடீர் சோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குள் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் தேராவில் துயிலும் இல்லங்கள் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களை அண்மித்த வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
#SrilankaNews