அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கேட் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் பலத்த காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் அராலி செட்டியர் மடம் சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு – விசுவமடு பகுதியை சேர்ந்த, வட்டுக்கோட்டை மேற்கில் வசித்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews