கொவிட் தொற்றுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அராலி வீதி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
எனினும் அவர் இன்று காலை உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழப்புக்கான காரணம் COVID 19 தொற்று என பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
#SrilankaNews
Leave a comment