கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஆனந்தராசா சீதேவி (வயது – 47) என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளுமே லக்சிகா (வயது – 17) தீக்கிரையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சம்பவ இடத்துக்கு இன்று (22) காலை விஜயம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெற்றோல் நிரப்பப்பட்ட பெற்றோல், கத்தி ஒன்றும் மற்றும் தொலைபேசி ஒன்று ஆகியவை தடயவியல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment