மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.22 வயதான கீர்த்தனா என தெரியவந்துள்ளது.
மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த குறித்த யுவதி, மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 02 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்போது தான், தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட சிசிரிவி காணொளியை பொலிசார் பெற்றிருந்தனர். இருப்பினும் குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதவேளை குறித்த யுவதியின் சடலத்தை தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றைய (14) வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews