மகாவலி ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்து காணாமல் போன நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி – குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்தநிலையில் விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும் காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SrilankaNews