1500x900 44539507 earthquake
செய்திகள்இலங்கை

கண்டியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.2 ஆகப் பதிவு!

Share

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர – தேவஹந்திய பகுதியில் இன்று (08) மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று மாலை 5.05 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடியூட் (Magnitude) ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது பாரிய சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நில அதிர்வு தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு சிறிய அளவிலான நில அதிர்வு என்பதால், சுனாமி அல்லது மேலதிக அனர்த்த அபாயங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...