MP Mano demands Rs. 2000 minimum wage for plantation workers in budget
செய்திகள்இலங்கை

சம்பள உயர்வு அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்க! – தொழில் அமைச்சின் கூட்டத்தில் மனோ கணேசன், திகாம்பரம் வலியுறுத்தல்!

Share

தோட்டத் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆராயும் தொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்திற்குப் பின்வரும் விடயங்களைக் கொண்டு வந்தார்.

இம்மாதம் அறிவிக்கப்பட்டுள்ள 400 ரூபாய் சம்பள உயர்வு (அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது) அரச பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர்கள் மற்றும் தனியார் சிறு தோட்டங்கள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும்.

“வரவு செலவுத் திட்டத்தின் போது இந்தச் சம்பள உயர்வை முன்னிறுத்தியே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் உரையாற்றுகையில், தோட்ட நிறுவனங்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்:

சம்பள உயர்வு வழங்கப்படுவதைக் காரணம் காட்டி, தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை (நிறை) நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

வழக்கத்தை விட அதிக அளவில் கொழுந்து பறிக்காவிட்டால் முழு நாள் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என நிறுவனங்கள் தொழிலாளர்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கம் அறிவித்த 400 ரூபாய் உயர்வு தொழிலாளர்களைச் சென்றடையாது என்பதால், இதில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், கலைசெல்வி உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதாரப் போராட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...