இனி நாட்டில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்காலத்தில் மீற்றர் இல்லாமல் இயங்கும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கரவண்டித் தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்குமுறை அதிகார சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews