நாட்டில் தற்போது எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews