சுற்றுச்சூழல் சபைக்கு பணிப்புரை விடுத்த சுற்றாடல் அமைச்சர்!!!

air polution 1

மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றுச்சூழல் சபைக்கு அறிவுறுத்துகிறார்.​

சுற்றாடல் அமைச்சின் புதிய தேசிய சுற்றாடல் சபையின் 14வது அமர்வு இன்று (30) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில், மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வனஸ்பதி உறுவாரிகே வன்னியலெத்தோ உட்பட சுற்றாடல் சபையின் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version