பதவி விலகுகிறார் அமைச்சர் சி.பி ரத்னாயக்க!!

CB ratnayeke

அமைச்சர் சி.பி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று இறுதி முடிவை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியால் நேற்று அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பால் சிபி கலக்கத்தில் இருக்கின்றார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனக்கு வேலைசெய்யக்கூடிய அமைச்சு பதவி கிடைக்குமென நம்பினார். எனினும், அது நடக்கவில்லை. இந்நிலையிலேயே பதவி விலக தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில், தனக்கு எதிரானவர் எனக் கருதப்படும் எஸ்.பிக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்பட்டமையும், அவரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version