பால் பண்ணையாளர்களின் ஒரு லீற்றர் திரவப் பாலுக்கான கொடுப்பனவு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ் விலை அதிகரிப்பு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இவ்விலை உயர்வால், விவசாயிகளுக்கு மிக உயர்ந்த தரமான பால் லீற்றருக்கு சுமார் ரூ.100 கிடைக்கும் என்றும், பாலின் தரத்தைப் பொறுத்து செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பால் பண்ணையாளர்களால் வழங்கப்படும் பாலின் அளவுக்கேற்ப லீற்றருக்கு செலுத்தப்படும் தொகையும் மாறுபடுமெனவும், லீற்றரின் கொள்ளளவு அதிகரிக்கும் போது விவசாயியின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews