WhatsApp Image 2021 11 06 at 8.41.54 AM
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

Share

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2ம் திகதி நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவருக்கு ஹக்கீமும், மனோவும் எடுத்துக் கூறினர்.

மேலும், வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புகிறோம் என மனோவும், ஹக்கீமும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்,

“தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.” அந்த முயற்சியை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பமாட்டாது. நாங்கள் கலந்து பேசத்தான் வேண்டும். ஒற்றுமையை மேலும் பலப்படுத்தத்தான் வேண்டும்.

தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தை தளத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும்போது, நமது கட்சி எம்.பிக்களுடன் கலந்து பேசி உங்களுக்கு அறிவிக்கிறேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...