தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் 02ம் கட்ட கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் இக்கூட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்றுவருகின்றது.
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளில் ஓரங்கமாக ,
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும்,
அதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கும் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி யாழில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
யாழில் நடைபெற்ற கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி,
ரிஷாட் பதியுதீன் எம்.பி. தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், அக்கட்சிகள் பங்கேற்கவில்லை.
தமிழரசுக்கட்சியும் வரவில்லை. இம்முறையும் அவர்கள் பங்கேற்கவில்லை
#SrilankaNews
Leave a comment