இலங்கை – இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்களுக்கான சந்திப்பு !

Retno Marsudi 700x375 1

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின் போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்திய பெருங்கடற்பரப்பில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கான பாதுகாப்பு, தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது .

இரண்டு நாடுகளுக்குமிடையான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது , சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version