அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த விடயம் தொடர்பில் இன்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று அவ்வறிக்கை சுட்டிகாட்டுகின்றது.
ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே ரத்நாயக்க விடுவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரித்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கு 9 சதவீதத்தால் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment