sajith
செய்திகள்அரசியல்இந்தியா

அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் இன்று!

Share

அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.

‘நாடு நாசம், மீட்டெடுப்போம்’ – எனும் தொனிப்பொருளிக்கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மக்களும், கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பும் சடுதியாக குறைவடைந்துள்ளது. பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, இவற்றை சீர்செய்வதற்கு அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படவுள்ளது. இன்றைய போராட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும்.

குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...