பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர்.
ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர்.
துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தன.
திடீரென அந்த வீதியில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதிய பேருந்து ஒன்று தீப்பற்றியது.
அதில் 12 போ் சிறுவா்கள் உட்பட 45 போ் சம்பவ இடத்தில் கருகி சாவடைந்தனர்.
உடனடியாக அவ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இவ்விபத்தில் காயமடைந்த 7பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து பல்கேரியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்விபத்தால் நாடே சோகமயமாகியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பல்கேரியா அதிக விபத்துகள் நடைபெறும் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world