Murder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Share

மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியிலிருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (வயது 56) என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரும், அவருடைய நண்பரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்திலுள்ள வாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் உயிரிழந்த நபரை தாக்கிய நிலையில் தான் அங்கிருந்து தப்பியோடி காட்டில் ஒளிந்திருந்ததையடுத்து இன்று காலை அங்கிருந்து வெளியேறியதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டாருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...