கேரள கஞ்சாவுடன் நபரொருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய காத்தான்குடியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறைந்துரைச்சேனைக்கு வியாபார நோக்கில் கேரள கஞ்சாவினை கடத்தி வந்துள்ளார்.
நிலையில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 2 கிலோ அளவிலான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment